/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமாரக்குடி குறுகிய பாலம் அருகே விபத்தை தடுக்க எச்சரிக்கை பலகை அமைக்கப்படுமா?

ADDED : நவ 04, 2024 05:24 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரக்குடி அருகே குறுகிய வளைவு பாலம் இருப்பதை உணர்த்தும் எச்சரிக்கை பலகை அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பிற்கும் குமாரக்கும் இடையில் வீராணம் ஏரியிலிருந்து வெள்ளாற்றுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்காலில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு குறுகிய வளைவு பாலம் கட்டப்பட்டுள்ளது.
அந்த கால போக்குவரத்திற்கு ஏற்றார்போல கட்டப்பட்டுள்ள குறுகிய வளைவு பாலத்தில் ஒரு கனரக வாகனங்கள் கடந்து செல்லும் வரை எதிரே வரும் வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டும்.
இந்த பாலத்தின் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ், லாரி, டாரஸ், டேங்கர் லாரிகள் என 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுதியாக இருந்து வருகிறது.
இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் குறுகிய பாலம் இருப்பது தெரியாமல் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் இருப்பதை உணர்த்தும் வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் பிரதி பலிப்பான் ஆகியவற்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.