ADDED : டிச 23, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: பெரியாண்டிக்குழி-மடவாப்பள்ளம் சாலையில், படர்ந்துள்ள முந்திரி மரங்களை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி-மடவாப்பள்ளம் பகுதியை, இணைக்கும் வகையில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, இப்பகுதி மக்கள் பெரியப்பட்டு, புதுச்சத்திரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சாலையின் ஓரம் முந்திரி மரங்கள் படர்ந்து சாலையில் ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்களை, கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
சாலையில், படர்ந்துள்ள முந்திரி மரங்களை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

