/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீவளூர் தார் சாலை அகலப்படுத்தப்படுமா
/
தீவளூர் தார் சாலை அகலப்படுத்தப்படுமா
ADDED : பிப் 05, 2024 04:14 AM
பெண்ணாடம் : பெண்ணாடம் - தீவளூர் தார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடத்தில் இருந்து கோனுார், தாழநல்லுார் வழியாக தீவளூர் செல்லும் தார் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி பஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேலும், இச்சாலையை பயன்படுத்தி திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு செல்கின்றனர்.
பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் ரயில் நிலையம் பிரிவு வரையிலான சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் எதிரே வாகனங்கள் வரும்போது வழிவிட முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகனங்கள் சாலையோர விளைநிலங்களில் கவிழும் அபாயம் உள்ளது.
எனவே, தீவளூர் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

