/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவாரா? பண்ருட்டி தொகுதியில் உ.பி.,கள் எதிர்பார்ப்பு
/
தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவாரா? பண்ருட்டி தொகுதியில் உ.பி.,கள் எதிர்பார்ப்பு
தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவாரா? பண்ருட்டி தொகுதியில் உ.பி.,கள் எதிர்பார்ப்பு
தி.மு.க., வேட்பாளர் போட்டியிடுவாரா? பண்ருட்டி தொகுதியில் உ.பி.,கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 26, 2025 11:36 PM
நெ ல்லிக்குப்பம் சட்டசபை தொகுதி கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை இருந்தது. அதன்பிறகு நடந்த தொகுதி மறு சீரமைப்பின் போது நெல்லிக்குப்பம் தொகுதியே இல்லாமல் போனது.
நெல்லிக்குப்பம் தொகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் பண்ருட்டி சட்டசபை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் தே.மு.தி.க., சார்பில் போட்டியிட்ட சிவக்கொழுந்து வெற்றி பெற்றார். 2016ம் ஆண்டு தி.மு.க., கூட்டணியில் பண்ருட்டி தொகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர், தற்போதைய கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அ.திமு.க., சார்பில் போட்டியிட்ட சத்யா பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெற்றி பெற்றார்.
பண்ருட்டி தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களாக தி.மு.க., கூட்டணியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களே போட்டியிட்டனர். இத னால் தி.மு.க., வினர் அதிருப்தியிலும் ஏக்கத்திலும் உள்ளனர். மேலும், எந்த பலனும் அடையாததால் விரக்தியில் உள்ளனர். வரும் 2026 தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை நிறுத்தினாலும் வெற்றி பெறச்செய்து விடுவார்கள் என்ற நினைப்பில் தலைமை நடந்து கொள்ளாமல் தி.மு.க., வேட்பாளர் போட்டியிட வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.