/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரியில் குப்பை கழிவுகள் தண்ணீர் மாசு அடைவது தடுக்கப்படுமா
/
வீராணம் ஏரியில் குப்பை கழிவுகள் தண்ணீர் மாசு அடைவது தடுக்கப்படுமா
வீராணம் ஏரியில் குப்பை கழிவுகள் தண்ணீர் மாசு அடைவது தடுக்கப்படுமா
வீராணம் ஏரியில் குப்பை கழிவுகள் தண்ணீர் மாசு அடைவது தடுக்கப்படுமா
ADDED : ஜன 22, 2025 09:26 AM

சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடியில் துவங்கும் வீராணம ஏரி, காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை வரையில் 14 கி.மீ., துாரம் உள்ளது. ஏரிக்கரையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் பரிபூரணநத்தம், வெய்யலுார் சாவடி என ஆங்காங்கே ஏரியின் கரை உட்புறத்தில் சாணம், குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.
சாணத்துடன் மாடுகள் திண்று மீதமுள்ள வைக்கோல்களையும் கொண்டு வந்து போடுவதால் காற்றில் பறிந்து ஏரி தண்ணீரில் விழுகின்றன.
ஏரியிலிருந்து சென்னை மாநகரத்திற்கு மெட்ரோ நிறுவனம் தண்ணீர் அனுப்பி வரும் நிலையில் இது போன்று குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக குப்பைகளை கொட்டி வரும் நிலையில் ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தற்போது ஏரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் மாட்டு சாணம், குப்பைகள் கலப்பதால் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.