ADDED : நவ 09, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கட்டப்பட்ட நுாலகம், பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி, 25 வது வார்டில் மக்கள் வாசிப்பு திறனை அதிகரிக்க பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 18 லட்சம் ரூபாய் செலவில் நுாலக கட்டடம் கட்டப்பட்டது.
இந்த பணி முடிந்து பல மாதங்களாகிறது. ஆனால் இன்னும் நுாலகம் திறக்கப்படாமலேயே உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட நுாலக கட்டடம் வீணாகி வருகிறது. இந்த நுாலகத்தை உடனடியாக திறக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

