/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
துாக்கத்தை தொலைக்கும் கடலுார் மக்கள் மாநகராட்சி கவனிக்குமா
/
துாக்கத்தை தொலைக்கும் கடலுார் மக்கள் மாநகராட்சி கவனிக்குமா
துாக்கத்தை தொலைக்கும் கடலுார் மக்கள் மாநகராட்சி கவனிக்குமா
துாக்கத்தை தொலைக்கும் கடலுார் மக்கள் மாநகராட்சி கவனிக்குமா
ADDED : ஜன 15, 2025 12:25 AM
கடலுார் மாநகரில் தொடர் மழை, வெள்ளத்திற்கு பின் பல குடியிருப்பு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பாதாள சக்கடை திட்டம் செயல்படுத்திய பின்னர் கொசுக்கள் உற்பத்தியே இருக்காது என்று கூறப்பட்டது.
ஆனால் பாதாள சாக்கடைத்திட்டம் உள்ள பகுதிகளிலும் கொசுத்தொல்லை இருந்து வருகிறது. மாலை 6:00 மணிக்கு துவங்கும் கொசு கூட்டம் மறுநாள் சூரிய உதயம் வரை நீடிக்கிறது. சாலைகளில் யாரையாவது திடீரென சந்தித்தால் கூட ஒருவரையொருவர் நின்று பேசக்கூட முடியாமல் கொசு விரட்டி விடுகிறது.
வெளியில்தான் இப்படி என்றால் வீட்டிற்குள் படுமோசம். 24 மணி நேரமும் கொசுக்கடியால் குடியிருப்பவர்கள் அவதிப்படுகின்றனர். கொசுவை ஒழிக்க புகை, ரசாயன வத்திகள், ஆல்அவுட், குப்நைட் போன்றவற்றிக்கும் கொசுக்கள் கட்டுப்படுவதில்லை.
மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிப்பது சம்பிரதாயமாக ஆகிவிட்டது. ஆனால் தெளிக்கும் மருந்தில் கொசுக்கள் ஒழிகிறதா என பார்ப்பதில்லை. கொசுமருந்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தேவைப்படும் இடத்தில் கொசு மருந்து அடித்து வருகின்றனர்.
அதனால் அந்த மருந்தில் ஒன்றும் பெரியதாக பலனலிக்கவில்லை. இதனால் கடலுார் மாநகர மக்கள் இரவு நேரங்களில் துாக்கத்தை தொலைத்து வருகின்றனர்.
இனியாவது மாநகராட்சி கொசுக்கடியில் இருந்து காப்பாற்ற தொடர் மருந்து தெளிப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். அப்போதுதான் கடலுார் மக்கள் நிம்மதியாக துாங்க முடியும்.