தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?

 குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?

 குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?


ADDED : பிப் 18, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கா ட்டுமன்னார்கோவில், சிதம்பரம் டெல்டா பகுதி உள்ளிட்ட கடலுார் மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு மூன்று லட்சம் மெட்ரிக் டன் அளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல், தனியார் வியாபாரிகளிடம் 50 சதவீதம், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் 50 சதவீதம் என விற்பனை செய்கின்றனர்.

அரசு அறிவித்த விலையின்படி, கடந்த 2024 ம் ஆண்டு முதல் சன்ன ரகம் நெல் ஒரு கிலோ ரூபாய் 25.45 பைசா. மோட்டா பொது ரகம் நெல் ஒரு கிலோ ரூபாய் 25 என அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த, 2025 மற்றும் 2026 ம் ஆண்டிற்கு அரசு நெல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விவசாயிகளிடமிருந்து தனியார் வியாபாரிகள் அரசு விலையை பொறுப்பெடுத்தாமல் தனியார் வியாபாரிகளே ஒரு விலையை நிர்ணயம் செய்து கொண்டு கிலோ 22 ரூபாய் வீதம் 63 கிலோ கொண்ட மூட்டை ரூபாய் 1350 முதல் 1400 ரூபாய் வீதம் கொள்முதல் செய்கின்றனர். இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாத விலையாக இருப்பதால் விவசாயிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தனியார் வியாபாரிகள் கடந்த 2024 ம் ஆண்டு பி.பி.டி., போன்ற சன்னரகம் நெல் வகைகளை ரூபாய் 1500 முதல் 1600க்கு கொள்முதல் செய்தனர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து ரூபாய் 1350 அளவில் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள், அறுவடை இயந்திரத்தின் வாடகை, ஆட்கள் கூலி என அனைத்தும் பன்மடங்கு உயர்ந்த வண்ணம் உள்ளது.

மேலும் புயல் மழை போன்றவைகளையும் எதிர்கொண்டு நெல் சாகுபடி செய்ய வேண்டி உள்ளது. விவசாயிகள் நிலம் உழவு செய்வது முதல் அறுவடை செய்யும் வரை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை செலவு செய்கின்றனர்.

அரசும் கடந்த இரு ஆண்டுகளாக நெல் விலையை உயர்த்தாமல், இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நெல் உற்பத்தி அதிகரித்து வந்தாலும் நெல்லுக்கு ஏற்ற விலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என புலம்புகின்றனர்.

விவசாயிகளிடமிருந்து தனியார் வியாபாரிகள் அடிமாட்டு குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படும் அளவு அதிகரித்துள்ளது.

நேரடி கொள்முதல் நிலையங்களில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை, மூட்டைக்கு தொகை என பல சிக்கல்களால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் எடுத்துச் செல்வதில் சற்று தயக்கம் காட்டுகின்றனர்.

இதனை பயன்படுத்திக் கொண்டு தனியார் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் தனியார் வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us