/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்படுமா பரங்கிப்பேட்டையில் மைசூர் போர் 'கல்வெட்டு'

ADDED : செப் 25, 2024 03:41 AM

மைசூரை ஆண்ட ஹைதர் அலிக்கும் இங்கிலாந்து படைகளுக்கும் இடையே, இரண்டாவது மைசூர் போர் 1780 முதல் 1784 வரையில் நடந்ததாக வரலாறு. இதில், 1781ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி, கடலுார் மாவட்டம் பங்கிப்பேட்டையில் நடந்த மைசூர் போர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ]
இங்கு, ைஹதர் அலி படைக்கும், ஆங்கிலேய படை தளபதி சர் ஜெனரல் அயர்கூட் தலைமையிலான படைக்கும் போர் நடந்துள்ளது. இந்த போர் நடந்ததற்கான நினைவாக, பரங்கிப்பேட்டை வெள்ளாங்கரையில் இன்றைக்கும் கல்வெட்டு உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அருகே உள்ள இந்த கல்வெட்டு மற்றும் நினைவு கொடிகம்பம் கேட்பாரற்று கிடந்தது.
பொதுமக்களின் கோரிக்கை ஏற்று, பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர், மதிற்சுவருடன் கூடிய பூங்கா அமைத்து, கல்வெட்டு மற்றும் நினைவு கொடி கம்பத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த பூங்காவிற்கு, ஹைதர் அலி பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், போருக்கு முன்பாக ைஹதர் அலி தொழுகை செய்த இடமும் இங்குள்ளது. எனவே, வரலாற்று நினைவு சின்னமான மைசூர் போர் நினைவிடத்தை, அழியா சின்னங்களாக பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.