/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு
/
நகராட்சி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு
நகராட்சி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு
நகராட்சி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 01, 2025 01:14 AM
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சியில் இரண்டு மாதங்களாக நடைபெறாத நகராட்சி கூட்டத்தை இந்த மாதமாவது நடத்த வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் மாதந்தோறும் ஒரு முறை நகராட்சி கூட்டம் நடந்தது. சில நேரங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது. கடந்த ஜூலை 31ம் தேதி கூட்டம் நடந்தது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் என, இரண்டு மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை.
இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறுகையில், 'மாதத்திற்கு ஒருமுறை அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே கூட்டம் நடக்கும். அதற்கு கூட நகராட்சி நிர்வாகத்தால் நேரம் ஒதுக்க முடியவில்லை. கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகளை கூற முடியவில்லை.
மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் உரிய காரணம் கூறி கூட்டம் நடத்தாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். இந்த மாதம் கூட்டம் நடத்துவார்களா அல்லது அனுமதி பெற்று கூட்டம் நடத்துவதை ஒத்தி வைப்பார்களா என தெரியவில்லை. மக்கள் பிரச்னைகளை விவாதிக்க இந்த மாதம் கூட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டுமென' கூறினர்.