/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ?
/
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ?
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ?
என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படுமா ?
ADDED : ஜூன் 11, 2025 07:52 PM
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் என்.எல்.சி., பள்ளி விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகினறனர்.
மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ ,மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்கள் காலை, மாலையில் விளையாட்டு, நடை, ஒட்ட பயிற்சி மேற் கொண்டு வருகின்றனர். பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி மைதானம் தற்போது பராமரிப்பின்றி பள்ளி மைதானம் சுற்றுச்சுவர் அருகே உள்ள கடை மற்றும் பேக்கரி கடைகளில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்படுவதால் அப்பகுதி முழுவதும் துார்நாற்றம் வீசி காணப்படுகிறது.
தற்போது மைதானம் நடுவே மண் அரிப்பால் பள்ளம் மேடு இருப்பதால் மாணவர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் விளையாட முடியமால் அவதியடைகின்றனர். மேலும் பள்ளி மைதானத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கு எரியாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.
எனவே மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் உள்ள ைஹமாஸ் விளக்கு சீரமைக்க என்.எல்.சி., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்