ADDED : நவ 17, 2025 01:49 AM

புவனகிரி: பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புவனகிரி அருகே மஞ்சக்கொல்லை வழியாக பரங்கிப்பேட்டை கடைமடை வரை செல்லும் பாசன வாய்க்காலில் வரும் காவிரி தண்ணீரை தேக்கி புவனகிரி சுற்றுப்பகுதியில் ஆண்டு தோறும் சம்பா நடவு மற்றும் விதை நேர்த்தி செய்து வருகின்றனர்.
நடப்பாண்டில்மஞ்சக்கொல்லை, சீயப்பாடி, பு.உடையூர், வண்டுராயன்பட்டு உள்ளிட்ட கிராமங்களில், ஆயிரம் ஏக்கருக்கு மேலாக, நடவு மற்றும் விதை நேர்த்தி செய்துள்ளனர்.
இந்நிலையில் அதிகாரிகள் அலட்சியத்தினால் தற்போது பாசன வாய்க்காலில் முட்புதற்கள் மண்டி, ஆகாயத்தாமரைகள் தேங்கி, பாசனத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், தற்போது துவங்கியுள்ள மழையில் தண்ணீர் வடிய வைக்க முடியாமலும் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு துவங்கி பரங்கிப்பேட்டை கடைமடை வரை பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள முட்புதற்கள் மற்றும் ஆகாயத்தாமரைகளை துார் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

