UPDATED : ஜூலை 02, 2026 03:53 PM
ADDED : ஜூலை 02, 2026 03:52 PM

அ நிறம் | அளவு
பெண்ணாடம்:சோழன்நகரில் பயன்பாட்டிற்கு வராமல் நுாலகம் பாழாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்ணாடம் பேரூராட்சி, சோழன் நகரில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி இளைஞர்கள் நலன் கருதி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் நுாலகம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
மேலும், திறந்து கிடக்கும் நுாலகம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதால் கட்டடம் பாழாகி வருவதுடன், அரசு நிதி வீணாகிறது.
எனவே, சோழன்நகர் நுாலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
