/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்படுமா?: குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை தேவை
/
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்படுமா?: குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை தேவை
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்படுமா?: குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை தேவை
விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷன் இரண்டாக பிரிக்கப்படுமா?: குற்ற செயல்களை தடுக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 19, 2024 11:38 PM
விருத்தாசலம் நகரில் 1924ம் ஆண்டில், போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில், நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 29 தாய் கிராமங்கள், 11 குக்கிராமங்கள் உள்ளன. கடைவீதியில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷன் கடந்த 2000ம் ஆண்டு முதல், கடலுார் சாலை பெரியார் நகரில் இயங்கி வருகிறது.
ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் இன்ஸ்பெக்டர், 4 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 19 தலைமை காவலர்கள், 6 முதல்நிலைக் காவலர்கள், 2 காவலர்கள் 2 என 33பேர் மட்டுமேபணிபுரிகின்றனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷன்களையும் சேர்த்து கவனிக்க வேண்டியுள்ளது. கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் பகுதியில் உள்ளதால் விருத்தாசலத்தில் ஒரு பிரச்னை என்றால் அங்கிருந்த இன்ஸ்பெக்டர் வர 30 நிமிடங்கள் வரை தேவைப்படும். அப்போது, அசம்பாவிதங்களை தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
பொதுவாக, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் பதவியில் உள்ள அதிகாரிகள் தலைமையில் போலீசார் இரவு ரோந்து செல்வது வழக்கம். ஆனால், போலீஸ் பற்றாக்குறை காரணமாக கிராமங்களுக்கு ரோந்து செல்வது இல்லை. இதனால் கிராமங்களுக்கு போதிய பாதுகாப்பு தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
டவுன், தாலுகா அவசியம்
1924ம் ஆண்டில், பிரிட்டிஷ் காலத்தில், அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. தற்போது, மக்கள் தொகை, நகர, ஊராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், ஒரே போலீஸ் ஸ்டேஷன் மூலம் குற்ற செயல்களை கண்காணிப்பது சிரமமாக உள்ளது. எனவே, டவுன், தாலுகா போலீஸ் ஸ்டஷன்களாக பிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சிதம்பரம் நகரில், டவுன் ஸ்டேஷன், தாலுகா, அண்ணாமலை நகர் என 3 ஸ்டேஷன்கள் உள்ளன. சிதம்பரம் நகரத்தை விட பெரிய பரப்பளவை கொண்ட விருத்தாசலத்தில் ஒரு ஸ்டேஷன் மட்டுமே உள்ளது.
கோப்புகள் தேக்கம்
கடந்த காலங்களில் பணிபுரிந்த எஸ்.பி.,க்கள் ஆய்வுக்கு வந்தபோது, விருத்தாசலத்தை டவுன், தாலுகா என இரண்டு ஸ்டேஷன்களாக பிரிக்கவும், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் ஸ்டேஷன்களுக்கு புதிதாக இன்ஸ்பெக்டர்கள் நியமிப்பது குறித்த கோப்புகள் தயாரிக்கப்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், பல ஆண்டுகளாகியும், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, நகராட்சியில் வசிக்கும் ஒன்றரை லட்சம் மக்கள் பயன்பெற டவுன் போலீஸ் ஸ்டேஷனும், 29 தாய் கிராமங்கள், 11 குக்கிராமங்கில் வசிக்கும் மக்களின் நலன் கருதி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும்.இதன் மூலம் வழக்குகளை விரைந்து விசாரித்து, அதிகரித்து வரும் குற்ற செயல்களை தடுக்க முடியும்.
இது குறித்து, கலெக்டர், எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.