ADDED : ஜூலை 28, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: வீடு புகுந்து திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் அடுத்த தெற்கு வெள்ளுரைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் குறவன்குப்பம் பகுதியில் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை சென்றார். அன்று மாலை, தெற்கு வெள்ளூர் வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த பொருட்களை திருட முயன்ற மர்ம பெண்ணை பிடித்து மந்தாரக்குப்பம் போலீசில் ஒப்படைத்து புகார் செய்தார்.
விசாரணையில், சிதம்பரம், மன்னார்குடி தெரு தமிழ்செல்வி,37; என்பதும், பொருட்கள் திருட முயன்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வியை கைது செய்தனர்.

