/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது
ADDED : நவ 24, 2024 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலுார், கேப்பர்மலை, சின்னையன் காலனியில் புதுச்சேரி மதுபாட்டில் விற்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் நேற்றிரவு 7:30 மணிக்கு விரைந்து சென்று, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி புனிதா,40; என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 90 மி.லி., அளவுள்ள 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.