/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
/
கடலுார் கலெக்டர் ஆபீசில் பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஜூலை 08, 2025 12:37 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலக வாயிலில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண், நுழைவு வாயில் அருகில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேரத்தனர். விசாரணையில், கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா, அகரம் ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி அன்புசெல்வி,45; என்பது தெரிந்தது.
இவர், தனக்கு சொந்தமான நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தார். அதில் பாதி இடத்திற்கு மட்டும் பணம் கொடுத்ததாகவும், மீதி பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
நிலத்தை அளந்து அத்து காட்ட வேண்டும் என தாசில்தாரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.