/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை
/
திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை
ADDED : ஏப் 03, 2025 08:19 AM
விருத்தாசலம்; திருமணமான பத்து மாதங்களில் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த கச்சிராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 28; இவரது மனைவி விஷ்ணு பிரியா, 21; 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விஷ்ணு பிரியா கடந்த 18ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். பின்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணுபிரியா நேற்று இறந்தார். இந்நிலையில், விஷ்ணுபிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தாய் அரசாயி கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் திருமணமான 10 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்டாரா என, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

