ADDED : மார் 21, 2024 12:24 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை அருகே நேற்று இரவு இளம் பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். தகவலறிந்த ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்அருண்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குசிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்தது சிதம்பரம் அடுத்த பெராம்பட்டை சேர்ந்த ரோகேஷ்வரன் மனைவி புவனேஸ்வரி, 28; என்பதும், திருமணமாகி 2 ஆண்டு ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவரை பிரிந்து கடந்த 6 மாதமாக வல்லம்படுகையில் உள்ள தந்தை செல்வமணிவீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்ப பிரச்னையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

