ADDED : நவ 03, 2024 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆதிமூலம் மனைவி அமுதா,48.இவர் கடந்த செப்., 21ம் தேதி அதே பகுதி வயல்வெளியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு வண்டு கும்பலாக வந்து அமுதாவை கொட்டின . உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் அமுதா சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.