ADDED : ஆக 12, 2025 02:59 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த பரிவிளாகம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்; ஹோட்டல் தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி, 35; திருமணமாகி குழந்தை இல்லை. நேற்று கணவர் வேலைக்கு சென்ற நிலையில், லைட் போடுவதற்காக சுவிட்ச் பாக்சில் ஒயர் சொருகி சுவிட்ச் ஆன் செய்துள்ளார் .
அப்போது மழை காரணமாக ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். வேலைக்கு சென்ற கணவர், மனைவியிடம் பேச போன் செய்துள்ளார். போனை எடுக்காததால், அருகில் உள்ள உறவினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
உறவினர் சென்று பார்த்தபோது சுந்தரி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், சுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் புத்துார் போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.