/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
/
பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
ADDED : டிச 20, 2024 05:59 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 1 சவரன் காசு மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி உஷா. இவர் நேற்று மாலை 4:00 மணியளவில் விருத்தாசலம் கடை வீதியில் உள்ள நகை கடையில், 1 பவுன் தங்க காசு வாங்கினார். பின்னர், கடை வீதியில் இருந்து திட்டக்குடி - விருத்தாசலம் பஸ்சில் ஏறி பஸ் நிலையம் வந்து, இறங்கினார்.
அப்போது, அவரது பையில் வைத்திருந்த 1 சவரன் காசு மற்றும் ரூ.5 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.