ADDED : அக் 25, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிராங்கிளின் அலெக்ஸ் மனைவி சவுமியா, 29; இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் விருத்தா சலம் கடலுார் சாலையில் சென்றார்.
அப்போது அதே பாதையில் பின் தொடர்ந்து வந்த டொயோட்டா கார், சவுமியா சென்ற ஸ்கூட்டரின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சவுமியா கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

