/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்
/
கடலுார் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்
ADDED : ஏப் 18, 2025 05:04 AM

கடலுார்: கடலுார் அருகே குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி, பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மனுகொடுத்தும் போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று காலை 8:00 மணிக்கு, அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட குமாரப்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளுடன் பேசி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.
இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கிறோம்.
முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை. பற்றாக்குறை நிலவுவதால் மிகவும் சிரமப்படுகிறோம். போதிய குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.