
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜேசீஸ் சார்பில் மகளிர் தின விழா நடந்தது.
ஜேசி லதா விஜயன் தலைமை தாங்கினார். ஜேசீஸ் தலைவர் செந்துாரபாண்டியன், சாசன தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் சிவராமன் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, பள்ளி முதல்வர் புனிதவள்ளி, சி.எஸ். ஜெயின் மெட்ரிக் பள்ளி முதல்வர் அபிராமி, எஸ்.பி.ஜி., வித்யாலயா நிர்வாக இயக்குனர் சங்கீதா வாழ்த்துரை வழங்கினர்.
மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் சுகன்யா ஜெயக்குமார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். முன்னாள் தலைவர்கள் விஜயன், மனோகர், குருராஜன், கோபிநாத், உறுப்பினர்கள் சுபஸ்ரீ, வனிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அருள்மொழி நன்றி கூறினார்.

