/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் சேமிப்பு திட்டம்: பயன் பெற அழைப்பு
/
மகளிர் சேமிப்பு திட்டம்: பயன் பெற அழைப்பு
ADDED : மார் 12, 2024 05:14 AM
கடலுார், : மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திகுறிப்பு;
பெண்களுக்காக புதிய சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டம் இந்த நிதியாண்டு முதல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் வயது வரம்பின்றி சேரலாம். திட்டத்தில் சேர குறைந்தபட்ச முதலீடு 1000 ரூபாயும், அதிகபட்ச முதலீடு 2 லட்சம் ரூபாய் ஆகும்.
இதற்கான வட்டி கூட்டு வட்டியாக காலாண்டிற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்பட்டு, இரண்டு ஆண்டு கழித்து முதிர்வடையும்போது வழங்கப்படும். இத் திட்டத்தில் வரும் 31ம் தேதி வரை மட்டுமே சேர முடியும். திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர், மகளிர் தினத்தை முன்னிட்டு 50,000 முதல் 2 லட்சம் வரை திட்டத்தில் முதலீடு செய்யும் சேமிப்புதாரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்பு குலுக்கல் போட்டி நடந்தது.
இப்போட்டியில் கடலுார் அஞ்சல் கோட்டத்தில் இருந்து ஒரு லட்சம் முதலீடு செய்த இருப்பு கிராமத்தை சேர்ந்த சரஸ்வதி மற்றும் 2 லட்சம் முதலீடு செய்த அக்கரைகோரியை சேர்ந்த சுபஸ்ரீ, பகண்டரக்கோட்டையை சேர்ந்த லட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசு அஞ்சலக அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சேர அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

