/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
/
வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தால் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 23, 2024 12:11 AM

கடலுார்: தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர்களின் காத்திருப்பு போராட்டத்தால், கடலுார் மாவட்ட அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.
இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். துணை தாசில்தார்கள் பணியிடத்தில் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். லோக்சபா தேர்தலுக்கு கூடுதலாக அலுவலர்கள் மற்றும் நிதியுதவி வழங்குவது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலகர் சங்கத்தினர் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட பொருளாளர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி கூறினார்.
விருத்தாசலம்
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு, மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் மணிகண்டன், வட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றித் தராவிட்டால், வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் வருவாய் பணிகள் முற்றிலுமாக பாதித்தது.