/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு
/
நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிகள் பாதிப்பு
ADDED : செப் 25, 2024 03:36 AM
நெல்லிக்குப்பம் நகராட்சியில், துப்புரவு ஆய்வாளர் பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் நகரில் துப்புரவு பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, வருவாய் ஆய்வாளர் இல்லாததால், செப்டம்பருடன் வருவாய் அரையாண்டில் குறைந்த சதவீதம் வரி மட்டுமே வசூலாகியுள்ளது. இதை கண்காணிக்க அதிகாரி இல்லாததால் பணிகள் பாதிப்பதோடு புதிய வீடுகளுக்கும் வரிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டட ஆய்வாளர் பணியிடமும் பல மாதங்களாக காலியாக உள்ளது. இங்கு பணிபுரியும் கமிஷனர், கூடுதலாக வடலுார் நகராட்சியையும் கவனித்தால் இங்கு முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.
இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளும் ஆர்வம் காட்டவில்லை. எனவே, காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.