/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் ரூ. 1.50 கோடியில் பணி
/
கடலுார் பஸ் ஸ்டாண்டில் ரூ. 1.50 கோடியில் பணி
ADDED : ஆக 04, 2025 07:06 AM
கடலுார் : கடலுார் பஸ் ஸ்டாண்டில் ரூ.1.50 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது என, மாநகராட்சி கமிஷனர் அனு கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடலுார் பஸ் ஸ்டாண்டில் சில அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக, குடிநீர், பயணியர் அமரும் இடம் உள்ளிட்ட பணிகளுக்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் உள்ள சில கடைகள் பயன்பாடு இல்லாமல் உள்ளன.
அவற்றை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில கடைகளில் வாடகை பிரச்னை உள்ளது. இது தொடர்பாக ஆராய குழு வருகை தர உள்ளது. இக்குழு ஆராய்ந்து கூடுதல் வாடகையாக இருந்தால் அதை குறைக்க பரிந்துரை செய்யும். பஸ் ஸ்டாண்டில் மேம்பாடு பணிகள் விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.