/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.புதுாரில் மீண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி துவக்கம்
/
எம்.புதுாரில் மீண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி துவக்கம்
எம்.புதுாரில் மீண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி துவக்கம்
எம்.புதுாரில் மீண்டும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : மார் 08, 2025 02:32 AM

கடலுார்: கடலுார் மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புதிய பஸ் நிலையம், கேப்பர் மலையில் உள்ள எம்.புதுாரில் மீண்டும் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் புதிய பஸ்நிலையம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது அனைவரும் கடலுாரின் மையப்பகுதியில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கருத்து தெரிவித்தனர். அதனடிப்படையில் 2021-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான தொடக்க விழாவும் நடந்தது. அதனைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தமிழகத்தில் தி.மு.க., பதவியேற்ற பிறகு கடலுார் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்து வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என சிபாரிசு செய்தனர்.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முன்னாள் அமைச்சர் சம்பத் உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் அதைத்தொடர்ந்து நேற்று தி.மு.க., கூட்டணியில் வலுவாக உள்ள மா.கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் புதிய பஸ் நிலையம் எம்.புதுாரில் துவங்குவதிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்டதாக வருவதால் பொது மக்கள், கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க., வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., தலைமையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதன்காரணமாக எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்கும் பணியை ஒத்தி போட்டது.
இதற்கிடையே திருப்பாதிரிப்புலியூர் பாதிரிக்குப்பம் பெருமாள் கோவில் இடத்தை 2 பகுதியை தேர்வு செய்ததாக போக்கு காட்டியது. அது தொடர்பாக மாநகராட்சி எந்த பூர்வாங்கப் பணியையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் கடலுார் வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் இது குறித்து அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் பஸ் நிலையம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பஸ் நிலையப்பணியை தொடருங்கள் என முதல்வர் கூறியதாக தெரிகிறது.
அதைத்தொடர்ந்து அதிகாரிகளுடன் மாவட்ட நிர்வாகம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்நிலையில் நேற்று காலை ஓசையின்றி எம்.புதுாரில் பஸ் நிலையப்பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஐந்திற்கும் மேற்பட்ட ஜே.சி.பி., வாகனங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதேநேரத்தில் கடலுாரில் உள்ள எதிர்ப்பாளர்களும் போராட தயாராகி வருகின்றனர்.