/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி சாலைகளில் படியும் கரித்துகள் அகற்றும் பணி துவக்கம்
/
நெய்வேலி சாலைகளில் படியும் கரித்துகள் அகற்றும் பணி துவக்கம்
நெய்வேலி சாலைகளில் படியும் கரித்துகள் அகற்றும் பணி துவக்கம்
நெய்வேலி சாலைகளில் படியும் கரித்துகள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 08:07 AM

நெய்வேலி : நெய்வேலி சாலைகளில் படியும் கரித்துகள்கள் அகற்றும் பணி துவங்கி யுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி.,யின் முதல் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் முழுமையடைந்து விட்டது.
முதல் சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மேல் மண் மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கும் ராட்சத இயந்திரங்கள் இரண்டாம் சுரங்கம், முதல் சுரங்கம்-1 ஏ, உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் முதல் சுரங்கத்தில் இருந்து அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக் கென கொண்டு செல்லப் பட்டு வந்த நிலக்கரி சப்ளை நின்று விட்டது.
இதனால் இரண்டாம் சுரங்கத்தில் இருந்த நிலக்கரி, லாரிகள் மூலமாக முதல் சுரங்கத்தில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கிருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து லாரிகளில் நிலக்கரி கொண்டு செல்லப்படுவதால் நெய்வேலி டவுன்ஷிப்பில் இருந்து மந்தாரக்குப்பம் வரை செல்லும் சாலைகளில் கரித்துகள், சாம்பல் படிவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ், என்.எல்.சி., சுரங்க நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில் என்.எல்.சி., சார்பில் 42 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன சாலை சுத்தம் செய்யும் இயந்திரம் வாங்கப்பட்டது.
சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள தனியார் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று நெய்வேலி டவுன்ஷிப் - மந்தாரக்குப்பம் நெடுஞ்சாலையில் கரித்துகள்கள் சுத்தம் செய்யும் பணியை என்.எல்.சி., சுரஙகத்துறை அதிகாரிகள் குமார், நெடுஞ்செழியன், பூபதி ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் துவக்கி வைத்தார்.