/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவர்கள் பணி அனுபவ பயிற்சி
/
வேளாண் மாணவர்கள் பணி அனுபவ பயிற்சி
ADDED : மார் 18, 2025 04:47 AM

விருத்தாசலம் : பெரியகண்டியங்குப்பம் கிராம முந்திரி விவசாயிகளிடம் வேளாண் மாணவர்கள் பணி அனுபவ பயிற்சி பெற்றனர்.
திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.
பெரியகண்டியங்குப்பம் கிராமத்தில் முந்திரி விவசாயிகளிடம் பயிரிடும் முறைகள், பாதுகாப்பு குறித்து களஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மாணவர்கள் முகமது அனஸ், மகாதேவன், மனோஜ், முகுந்தன், ஹரிஷ் முத்துராம், கண்ணன், குகன்ராஜ், கவுசிக், கிருபாகரன், முகிலன், ஹிர்திக்முகுந் ஆகியோர் நோய், பூச்சித் தாக்குதல் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், முந்திரி மரங்களுக்கு இடையே வேர்க்கடலை, உளுந்து, கொண்டைக்கடலை மற்றும் காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்வது குறித்து பரிந்துரை செய்தனர்.