/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 1 கோடியில் பாரா விளையாட்டு மைதானம் கடலுார் விளையாட்டரங்கில் பணி தீவிரம்

ADDED : மார் 27, 2025 04:36 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், 1 கோடி ரூபாய் மதிப்பில் , பிரத்யேக பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடக்கிறது.
2024ம் ஆண்டு பாரீஸில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த 16 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதிக்கு 2 கோடி ரூபாய், வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
இதையடுத்து பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்க நாட்டிலேயே முதல்முறையான பிரத்யேக விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக துணை முதல்வர் உதயநிதி அறிவித்தார்.
அதன்படி நடப்பாண்டில் திருச்சி, மதுரை, கடலுார், திருநெல்வேலி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பில் பாரா விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாரா விளையாட்டுகளுக்கு பிரத்யேக மைதானம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் பாரா விளையாட்டுகளில் தமிழக வீரர்கள் மேலும் பதக்கம் குவிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என வீரர்கள், பயிற்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.