/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்
/
கடலுார் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்
கடலுார் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்
கடலுார் துறைமுகத்தில் கோட்டியா கட்டும் பணி தீவிரம்
ADDED : நவ 09, 2024 07:07 AM

கடலுார் : கடலுார் தைக்கால் தோணித்துறை பகுதியில் கோட்டியா எனப்படும் சிறிய அளவிலான சரக்கு கப்பல்கள் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் கடலுார் மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் கோட்டியாக்கள் எனப்படும் சிறிய ரக சரக்கு கப்பல்கள் தயார் செய்யப்படுகின்றன. தரை மார்க்கமாக அனுப்பப்படும் சரக்குகளுக்கு எரிபொருள் செலவு, தேய்மானம் போன்றவற்றால் கூடுதல் செலவாகிறது. அதனால் அதிகமான சரக்குகளை அனுப்ப கடல்வழி மார்க்கத்தை வியாபாரிகள் தேர்வு செய்கின்றனர். இதனால் கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கோட்டியாக்களுக்கு அதிக மவுசு நிலவுகிறது.
கடலுாரில் தைக்கால் தோணித்துறை உட்பட சில பகுதிகளில் கோட்டியாக்கள் தயார் செய்யும் பணி நடக்கிறது. தற்போது 100டன் முதல் 400டன் வரையிலான சரக்குகளை கையாளும் திறன் கொண்ட பெரிய அளவிலான கோட்டியாக்கள் கட்டப்படுகின்றன.
சிறப்பான வேலைப்பாடுகள், தொழில்தெரிந்த வேலையாட்கள், கோட்டியா உருவாக்கத் தேவையான மரங்கள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலுார் பகுதிக்கு துாத்துக்குடி, அந்தமான் உட்பட பல பகுதிகளில் இருந்து கோட்டியா தயாரிக்க ஆர்டர்கள் வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் கோட்டியாக்கள் அரபிக்கடலில் உள்ள மங்களூர், மும்பை, போர்பந்தர் ஆகிய துறைமுகங்களில் சரக்கு கையாள பயன்படுத்தப்படுகின்றன. 400 டன் சரக்கை கையாளும் திறன் கொண்ட கோட்டியா உருவாக்க 350 டன் இலுப்பை மரங்களும், 3 ஆயிரம் சதுர அடி கோங்கு மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பின், இன்ஜின், புரொபெல்லர்கள், கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன. 400 டன் சரக்கு கையாளும் திறன் கொண்ட கோட்டியாக்களை உருவாக்க 3 கோடி ரூபாய் வரை செலவாகும் என, கோட்டியா பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

