/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீருடை பணியாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை
/
சீருடை பணியாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை
சீருடை பணியாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை
சீருடை பணியாளர் தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை
ADDED : நவ 29, 2024 04:35 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு எஸ்.பி.,ராஜாராம் பணி நியமன ஆணை வழங்கினார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், சிறைத்துறை காவலர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். இதில் கடலுார் மாவட்டத்திலிருந்து தேர்வான 30 இரண்டாம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதையடுத்து, கடலுார் மாவட்ட காவல் அலுவலகத்தில் இரண்டாம் நிலைக்காவலர் 25 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை 47 பேர், தீயணைப்புத்துறை 19, சிறைத்துறை 9 என 100பேருக்கு, எஸ்.பி.,ராஜாராம் பணி நியமன ஆணையை வழங்கினார்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், சிறைத்துறை ஜெயிலர் ரவி, தமிழ்நாடு சிறப்பு காவல்படை இன்ஸ்பெக்டர் எபினேசர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
பணிநியமன ஆணை பெற்றவர்களுக்கு டிச., 4ம் தேதி முதல் பயிற்சி துவங்குகிறது.

