/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழுதடைந்த கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கும் பணி துரிதம்
/
பழுதடைந்த கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கும் பணி துரிதம்
ADDED : அக் 24, 2025 03:12 AM

நெல்லிக்குப்பம்: கஸ்டம்ஸ் சாலையில் உள்வாங்கிய பாலத்தை சரி செய்யும் பணி நடந்தது.
கடலூரில் இருந்து பகண்டை வரை பெண்ணையாற்றின் கரையில் கஸ்டம்ஸ் சாலை உள்ளது.
புதுச்சேரியில் இருந்து பண்ருட்டி, விழுப்புரம் செல்லும் வாகனங்கள் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் நகர பகுதிகளில் போக்குவரத்தில் சிக்காமல் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆற்றில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்றது. இதனால் மருதாடு அருகே சாலையின் குறுக்கே இருந்த பாலம் சேதமானது. நெடுஞ்சாலை துறையினர் பெயரளவுக்கு பாலத்தை சரி செய்தனர்.
கடந்த 21 ஆம் தேதி பெய்த கனமழையால் பாலம் திடீரென்று உள்வாங்கியது. இதனால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் மணிவேல் முன்னிலையில் சேதமான பாலத்தில் சிமண்ட் பைப்கள் புதைத்து சாலை அமைக்கும் பணி நேற்று நடந்தது.

