/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளி கைது
/
டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்த தொழிலாளி கைது
ADDED : அக் 27, 2025 12:12 AM
கடலுார்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டரை பணி செய்ய விடாமல் தடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை நல டாக்டராக ஆனந்தகிருஷ்ணன் உள்ளார். இவர், நேற்று பணியில் இருந்த போது, திருவந்திபுரம், சாலக்கரையைச் சேர்ந்த தொழிலாளி கோபாலகிருஷ்ணன், 34; காலில் அடிப்பட்டு சிகிச்சைக்கு வந்தார்.
அப்போது, சிகிச்சை அளிப்பது சரியில்லை எனக் கூறி டாக்டர் ஆனந்தகிருஷ்ணனை, கோபாலகிருஷண்ன் பணி செய்ய விடாமல் தடுத்தார். மேலும், அருகில் இருந்த செவிலியர்கள் நித்யா, விந்தியா, சஜிதாபானு ஆகியோரை திட்டி மானப்பங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

