/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்சாரம் பாய்ச்சி தொழிலாளி தற்கொலை
/
மின்சாரம் பாய்ச்சி தொழிலாளி தற்கொலை
ADDED : அக் 03, 2025 11:23 PM
வேப்பூர் : வேப்பூர் அருகே மாடுகள் காணாமல் போனதால் மனமுடைந்த கூலித் தொழிலாளி, டிரான்ஸ்பார்மரில் ஏறி தன்மீது மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பூர் அடுத்த கோ.கொத்தனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்பிரான், 65; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். காட்டு பகுதியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில், மாலை மேய்ச்சலிருந்த 4 மாடுகளைக் காணவில்லை.
வீட்டிற்கு வந்த எம்பிரான் மாடுகளைக் காணவில்லை என தனது மனைவியிடம் கூறி விட்டு தேடிப் பார்ப்பதாக கூறி மனமுடைந்த நிலையில் வெளியே சென்றவர், கண்டபங்குறிச்சி இடுகாட்டிற்கு செல்லும் பாதையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் கம்பியை பிடித்து தன் மீது மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வேப்பூர் போலீசார், விரைந்து சென்று எம்பிரான் உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.