ADDED : ஆக 04, 2025 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ரயிலில் அடிபட்டு கொத்தனார் இறந்தார்.
நெல்லிக்குப்பம், மேல்பாதியை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் தமிழரசன்,23; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றா ர்.
அப்போது, தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், அவர், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில், கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.