தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி

கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி

கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி


ADDED : டிச 15, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 06:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலம் மணிமுக்தாற்றில் உள்ள கழிவுநீர் கால்வாயில், சுமை துாக்கும் தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை மணிமுக்தாற்றின் பாலத்தின் கீழ் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று கிடந்தது. தகவலின் பேரில், விருத்தாசலம் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சடலத்தை மீட்டு, விருத்தாசலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், இறந்தவர், விருத்தாசலம் ஆலடி ரோடு, பாரதி நகரை சேர்ந்த குமார்,49; சுமை துாக்கும் தொழிலாளி, இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது.

சடலத்தை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us