தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மின்சாரம் தாக்கி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு: இருவர் மீது வழக்கு பதிவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு: இருவர் மீது வழக்கு பதிவு

மின்சாரம் தாக்கி தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு: இருவர் மீது வழக்கு பதிவு


UPDATED : நவ 16, 2026 07:33 PM

ADDED : நவ 16, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:33 PM ADDED : நவ 16, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தது தொடர்பாக இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கத்தைச் சேரந்தவர் கமலக்கண்ணன்,51; சென்ட்ரிங் தொழிலாளி. இவரை, கரிக்கலாம்பாக்கம் சூசைராஜ், புதுக்கடை நவக்குமார் ஆகியோர் புதுக்கடையில் தனியார் ரைஸ்மில்லில் இரும்பு சென்ட்ரிங் வேலைக்காக கடந்த 26ம் தேதி அழைத்து சென்றனர்.

அப்போது, மழை பெய்ததால் வேலை செய்ய முடியாது என கமலக்கண்ணன் கூறினார். ஆனால், வேலையை உடனடியாக முடிக்க வேண்டுமென, நவக்குமார் கூறியதால் கமலக்கண்ணன் சென்ட்ரிக் வேலை செய்தார். அப்போது, ஒயர் மீது இரும்பு கம்பி உரசியதால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி அவர் துாக்கி வீசப்பட்டார். புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், சூசைராஜ், நவக்குமார் மீது ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us