தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : நவ 16, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: மூட்டு வலியால் அவதியடைந்தவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன்,48; தொழிலாளி.

இவருக்கு கடந்த 15 ஆண்டிற்கு முன் ஏற்பட்ட விபத்தால் மூட்டு வலி ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். நேற்று (நவ.,15) இரவு, வலி அதிகமானது.

அதில் விரக்தியடைந்த லோகநாதன், களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்தவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் இன்று (நவ.,16) மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us