ADDED : அக் 07, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலத்தில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி இறந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஐவதுகுடியைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகன் கோவிந்தன், 33; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், தனது ஊரை சேர்ந்த 10 பேருடன் சின்னசேலம் மயூரா ஆற்றில் ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் அவர்கள் தங்கிருந்த ெஷட் அருகே தேங்கிய நீரை கோவிந்தன் வெளியேற்றினார்.
அப்போது மழை நீரில் மின் கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் தண்ணீரில் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கி கோவிந்தன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.