ADDED : ஜூலை 21, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : மொபட்டில் சென்ற தொழிலாளி, கார் மோதி இறந்தார்.
சோழத்தரம் அடுத்த பாளையங்கோட்டை, மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன்,39; பேக்கரி தொழிலாளி. இவர், நேற்று காலை சிதம்பரத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வழக்கம் போல் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.
வி.கே.டி., சாலையில் தண்டேஸ்வரநல்லுார் அருகில் வந்த போது, பின்னால் வந்த மாருதி கார் மோதியது.
இதில், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில், சோழத்தரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.