UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 04:26 PM
அ நிறம் | அளவு
வடலூர்: கட்டட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி, மயங்கி விழுந்து இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த மண்டப மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 38. கூலித் தொழிலாளி. இவருக்கு மங்கையர்கரசி, 32, என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் குறிஞ்சிப்பாடியில் உள்ள குணசேகரன் என்பவரின் வீட்டில் கட்டட வேலை செய்தபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடன் அவரை ஆம்புலன்ஸ் மூலம், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
