நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், :மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார் அடுத்த ரெட்டிச்சாவடியை சேர்ந்தவர் முருகன், 47; தொழிலாளியான இவர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக, 2 மாதங்களுக்கு முன்பு இடது கால் முட்டி வரை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன், கடந்த 11ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது அண்ணன் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.