நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: வேலை கிடைக்காத விரக்தியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் குபேந்திரன்,50; கரும்பு வெட்டும் தொழிலாளி.
சர்க்கரை ஆலையில் அறவை நின்றதால் கரும்பு வெட்டும் வேலை கிடைக்கவில்லை. எந்த வேலையில் கிடைக்காத விரக்தியில் இருந்த குபேந்திரன் விஷ விதைகளை உட்கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

