/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
/
தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
ADDED : பிப் 17, 2024 05:58 AM
கடலுார், : பதிவு பெற்ற தொழிலாளர்களின் விண்ணப்பங்களுக்கு உதவி மையம் மூலம் இணையத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமு செய்திக்குறிப்பு;
கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையவழி மூலம் 2.12.2023க்கு முன் புதிதாக பதிவு பெறுவதற்கு விண்ணப்பித்தவர்கள், பதிவு பெற்ற தொழிலாளி தங்களது பதிவினை புதுப்பித்தல் செய்வதற்கு விண்ணப்பித்தவர்கள், பதிவுபெற்ற தொழிலாளர்கள்.
கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், கண் கண்ணாடி நிதியுதவி கோரி விண்ணப்பித்தவர்கள் மற்றும் பதிவு பெற்ற தொழிலாளர்களின் நியமனதாரர்கள் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி கோரி விண்ணப்பித்தவர்கள் தங்களது விண்ணப்பம் நிலுவையில் இருப்பின் உரிய ஆவணங்களுடன் கடலுார் செம்மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து இணையத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.