ADDED : ஆக 07, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலகத் தாய்ப்பால் வார விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திட்டத்தலைவர் ஆல்பர்ட் ஜேசுதாஸ், முன்னாள் ரோட்டரி தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் பூங்கொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாய்ப்பால் வழங்குவதின் அவசி யம் குறித்து பேசினார். ரோ ட்டரி சங்க நிர்வாகிகள், சந்திரமெளலி, செந்தில்குமார், அருள்மணி உட்பட பலர் பங்கேற்று 60 தாய்மார்களுக்கு ஒட்டு சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. செவலியர்கள், அங்கன்வாடி பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.