/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காந்தி மன்றம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் விழா
/
காந்தி மன்றம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் விழா
ADDED : செப் 09, 2025 06:30 AM

சிதம்பரம் : சிதம்பரம் காந்தி மன்றம் மற்றும் மாவட்ட சர்வோதய மண்டல், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் விழா நடந்தது.
கோவிலாம்பூண்டி ஊ ராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், காந்தி மன்றத் தலைவர் ஞானம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை அங்கையற்கண்ணி வரவேற்றார்.
அரிமா சங்க துணை ஆளுநர் கமல் கிஷோர், ஓய்வு பெற்ற ஆசிரியர் சின்னதுரை, காந்தி மன்ற துணை செயலாளர் முத்துக்குமரன் வாழ்த்தி பேசினர். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர் பீனா நன்றி கூறினார்.
இதேப் போன்று, சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் குமராட்சி அடுத்த சிறகிழந்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த விழாவில், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் இளஞ்செழியன் தலைமை தாங்கினார்.
செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார்.
ஆசிரியர்கள் சத்தியசீலன், செல்வாம்பாள், கலைச்செல்வி, ஜான்சிராணி, ஸ்டாலின் மற்றும் பலர் பங்கேற்றனர். மாவட்ட சர்வோதய மண்டல் செயலாளர் முத்துக்குமரன் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கினார்.
ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.